CINEMA

leo audio launch cancelled லியோ இசை வெளியீட்டு விழா ரத்து! விஜய் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி

LEO திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்போவதில்லை என பட நிறுவனம் அதிரடி அறிவிப்பு

நடிகர் விஜய்யின் LEO திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்போவதில்லை என பட நிறுவனம் அறிவிப்பு

leo audio

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது

மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் LEO திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்போவதில்லை என பட நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

பாதுகாப்பு காரணங்களுக்காக லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்து இருக்கிறது.விஜய் அரசியலுக்கு வருவதை விரும்பாத ஒரு தரப்பினர் ஆடியோ லான்ச் விழாவுக்கு சிக்கல் ஏற்படுத்துவதாக முன்பே சர்ச்சை வந்தது. ஆனால் அப்படி எந்த அரசியல் ப்ரெஷரும் இந்த முடிவுக்கு காரணம் இல்லை என தயாரிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்

இது குறித்து டிவிட்டர் தளத்தில்:

Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch. In respect of the fans’ wishes, we will keep you engaged with frequent updates. P.S. As many would imagine, this is not due to political pressure or any other reasons.

Related Articles

Back to top button