CINEMA

chandramukhi 2 review in tamil சந்திரமுகி 2 திரை விமர்சனம்

chandramukhi review சந்திரமுகி 2 திரை விமர்சனம்

நடிகர்கள்:-

ராகவா லாரன்ஸ் ,கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன் ,ராதிகா, வடிவேலு, ரவிமரியா, சுபிக்ஷா கிருஷ்ணன், விக்னேஷ், சுரேஷ் சந்திர மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ருஷ்டி டாங்கே, மனோ பாலா, ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர்

இயக்கம்:- பி. வாசு

இசை: கீரவானி

சந்திரமுகி திரைவிமர்சனம்

கதை:-

சிட்டியில் தொழிலதிபராக இருக்கும் ராதிகா குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு சொந்தமான காட்டன் மில்லில் தீ விபத்து நிகழ்கிறது. ஒரு விபத்தில் ரங்கநாயகியின் இளைய மகள் லட்சுமி மேனன் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போகிறது. அவரது மூத்த மகள் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்.

தங்கள் குலதெய்வத்தை ராதிகா குடும்பத்தினர் மறந்து போனதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக அவர்கள் குடும்ப சாமியார் ராவ் ரமேஷ் சொல்வதைக் கேட்டு அனைத்து வாரிசுதாரர்களும் குலதெய்வ கோவிலுக்கு செல்கின்றனர். வேற்று மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்த மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாமியார் கூறியதால், அந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியனான ராகவா லாரன்ஸ் குலதெய்வ கோவில் ஊருக்கு வருகின்றனர்.

அந்த ஊரில் அனைவரும் தங்க சந்திரமுகி பங்களாவின் தற்போதைய ஓனர் வடிவேலு அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்குகின்றார்கள் கோவிலை சுத்தம் செய்ய சென்ற இரண்டு பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். பின், பங்களாவில் இருக்கும் சந்திரமுகியின் ஆவி ராதிகாவின் மகளாக நடித்திருக்கும் லட்சுமிமேனன் உடலுக்குள் புகுந்து விடுகிறது. குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி கங்கனா. லட்சுமி மேனன் உடம்பிற்குள் இருக்கும் சந்திரமுகி ஆத்மா எப்படி வெளியேறியது வெளியேறியதா இல்லையா இதனால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் சந்தித்தார்கள் இந்த பிரச்சனைகள் அனைத்தையும் ராகவா லாரன்ஸ் எப்படி சமாளித்தார் என்பது தான் கதை.

சுமார் 18 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படத்தினை 2 ம் பாகம் என எடுத்துள்ளார் இயக்குனர் பி.வாசு அந்த படம் மக்கள் மனதை வென்று எடுக்கவில்லை என்பது தான் யதார்த்தம்

Related Articles

Back to top button