CINEMA

bigg boss 7 tamil elimination பிக் பாஸ் சீசன் 7 முதலில் வெளியேறியது யார் தெரியுமா?

bigg boss 7 tamil பிக் பாஸ் இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக குறைவான ஓட்டுக்களை பெற்று ஒரு போட்டியாளர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் யார் யார் முழு விவரம் இதோ

பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

முதல் வாரமே எலிமினேஷன்வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே 2 வாரங்கள் அல்லது 1 வாரம் கழித்து தான் எலிமினேஷன் நடக்கும் ஆனால், இந்த முறை முதல் வாரத்திலேயே எலிமினேஷன் வைத்து ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நாமினேஷனும் நடைபெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரை, ரவீனா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இவர்களில் யார் குறைவான வாக்கு பெறுகிறார்களோ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த முதல் வாரத்தில் குறைந்த வாக்குக்கள் பெற்றுள்ள பாடகர் யுகேந்திரன் , பவா செல்லதுரை, அனன்யா ஆகிய 3 பேரில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது

மறைந்த பிரபலமான பாடகரான மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் ஏராளமான பாடல்களை பாடியும் உள்ளார் படங்களில் நடித்தும் உள்ளார்.

Related Articles

Back to top button