TamilNadu News

மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் இரண்டு ஆண்டு சிறை 50 ஆயிரம் அபராதம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

unregistered women's hostels District Collector Warning

மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் இரண்டு ஆண்டு சிறை 50 ஆயிரம் அபராதம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை ; கலெக்டர் எச்சரிக்கை

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால்
மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால்

அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும். என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/10/2023101871.pdf

Related Articles

Back to top button