TamilNadu News

sivaganga district local holiday மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

sivaganga local holiday பள்ளிகளுக்கு விடுமுறை சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு

மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம் தேதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு!

மருது சகோதரர்கள் நினைவு தினம்
மருது சகோதரர்கள் நினைவு தினம்

சிவகங்கையில் வரும் 27 ஆம் தேதி 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்

மருது பாண்டிய சகோதரர்களின் நிறைவு தினம் ஆண்டு தோறும் குருபூஜையாகக் கொண்டாடப்படும். அதே போல் இந்த வருடமும் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி அரசு சார்பில் குருபூஜை நடக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், பசும்பொன்னில் வரும் 30 ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழா நடக்கவுள்ளது.

இந்த பூஜைகளில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்வர்.இந்நிலையில் மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம் தேதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

Back to top button