TamilNadu News

Fake Heart Attack to Avoid Paying the hotel Bill ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் ஹார்ட் அட்டாக் நாடகமாடிய நபர் கைது

new Trick Avoid Paying the hotel Bill 20 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் ஏமாற்றிய நபர்

ஹோட்டலில் விலை உயர்ந்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு கட்டணம் செலுத்துவதை தவிர்க்க மாரடைப்பு ஏற்பட்டதுபோல் நடித்து 20க்கும் மேற்பட்ட உணவகங்களை ஏமாற்றிய 50 வயதான நபர் கைது!

Fake Heart Attack to Avoid Paying the hotel Bill
Fake Heart Attack to Avoid Paying the hotel Bill

20க்கும் மேற்பட்ட உணவகங்களில் பில் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக மாரடைப்பு என்று போலியாக மோசடி செய்ததற்காக ஸ்பெயினில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஸ்பெயினின் பிளாங்கா பகுதியில், 50 வயது முதியவர், அங்கு சாப்பிட்டு விட்டு பில் தொகை 37 டாலர் தரும் போது தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது போல் நடித்துள்ளார்

இது போல் அவர் பல பகுதிகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் நடித்து பில் கட்டுவதில் இருந்து தப்பித்துள்ளார், இவர் மோசடியானவர் என்பதை அறிந்த மற்றொரு ஓட்டல் உரிமையாளர் அவரது புகைப்படத்தை பலருக்கும் அனுப்பி இருந்தார்

உடனடியாக சுதாரித்த  ஹோட்டல் ஊழியர்கள் ஆம்புலன்ஸை அழைப்பதற்கு பதிலாக, அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கைது செய்தனர் பல உணவக உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் புகாரை அவர் மீது கொடுத்துள்ளார்கள் இது அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்

Related Articles

Back to top button