cyclone tej அரபிகடலில் உருவாகிறது தேஜ் புயல் இந்திய வானிலை ஆய்வு மையம்
cyclone alert அடுத்த 7 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர புயலாக வலுப்பெற்றால் இந்த புயலுக்கு இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட “தேஜ்” என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும் வலுவடைந்து 22ம் தேதி மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்தபடி, ‘தேஜ்’ என்று பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புயல் உருவாகினால் தமிழ்நாடு ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜ் புயல் அர்த்தம்:-
தேஜ் என்றால் ஒளி, பளபளப்பான, சக்தி, புத்திசாலித்தனம், மகிமை, பாதுகாப்பு, பிரகாசமான மற்றும் பிரகாசம் என பல அர்த்தங்களை சொல்கிறது.