tn govt jobs பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு
government jobs in tamilnadu மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வன்முறையால் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்ப, சமூகம் மற்றும் பணியிடத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், வயது, சாதி, கல்வி, திருமணநிலை. இனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் பாலியல், உளவியல் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பெண்கள். பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல் வன்முறை. போக்குவரத்தின் போது வன்முறை, ஆசிட் தாக்குதல் ஆகியவற்றிற்கு உட்பட்ட பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையமாகவும் செயல்படும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் 18 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு இலவசமாக 5 நாட்களுக்கு மட்டும் தங்கி இலவச உணவு மருத்துவ வசதி, இலவச உளவியல் மற்றும் மருத்துவ வசதி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே மணிநேரமும் (24X7) செயல்படும் 24 பாதிக்கப்பட்ட மகளிர்களுக்கான உதவி மையத்திற்காக கீழ்கண்டவாறு தொகுப்பூதிய முறையில் பணியாளர் நியமனம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி:-
Centre Administrator
Senior Counsellor
IT Administrator
Case Worker
Multipurpose Worker
Security
வயது வரம்பு:-
35 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி:-
1. மைய நிர்வாகி 1 பணியிடம் Centre Administor ரூ.30,000/- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பட்டப்படிப்பு MSW(அ) சட்டப்படிப்பு, 4 வருடம் அனுபவம் மற்றும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
2.முதுநிலை ஆலோசகர் பணியிடம் Senior Counsellor ரூ.20,000/- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பட்டப்படிப்பு MSW(அ) சட்டப்படிப்பு, 2 வருடம் அனுபவம் மற்றும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3.கணிணி நிர்வாகி1 பணியிடம் IT Administrator ரூ.18,000/- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பட்டப்படிப்பு இளங்கலை மற்றும் முதுகலை கணிணி அறிவியல் 3 வருடம் அனுபவம் மற்றும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4.வழக்கு பணியாளர் 6 பணியிடம்( Case Worker) ரூ.15,000/- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பட்டப்படிப்பு இளங்கலை சமூகபணி வருடம் அனுபவம் மற்றும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 1
5.பல்நோக்குபணியாளர்கள் 2 பணியிடம் Multipurpose Worker ) ரூ.6,500/- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 35வயதிகுள் இருக்க வேண்டும்.
6.காவல் 2 பணியிடம் (Security) ரூ.10,000/- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 35 வயதிற்குள் இருக்க வேண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளி உரிமைத்துறை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், 3/264 குமரன் தெரு. சீனிவாசபுரம், மயிலாடுதுறை – 609 001 என்ற முகவரிக்கு 31.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04364-212429, என்ற எண்களுக்கு தொடர்புக்கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் திரு ஏ.பி மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப படிவம்:-
https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/10/2023101447.pdf
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/10/2023101464.pdf