resume format in word சரியான ரெஸ்யூம் தயாரிப்பது எப்படி
resume format for job ஒரு ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்
சரியான ரெஸ்யூம் தயாரிப்பது எப்படி .ரெஸ்யூம் என்பது ஒருவரது திறன், கல்வித் தகுதி, அனுபவம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கை. இது ஒன்று முதல் இரண்டு பக்க அளவில் இருக்கலாம்.ரெஸ்யூமின் தலைப்பில் உங்கள் பெயர் மற்றும் அதற்கு கீழே உங்கள் சரியான முகவரி, கைபேசி எண், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களை தர வேண்டும். அதன் கீழே உங்களை பற்றியும் தொழில் தொடர்பான உங்கள் குறிக்கோள்கள் பற்றியும் இரண்டு, மூன்று வரிகளில் எழுதலாம்.
உங்களைப் பற்றி எழுதும்போது உங்கள் சிறப்பு திறன்கள், பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றி குறிப்பிடலாம். வேலை முன்அனுபவம் இல்லாத பட்சத்தில் உங்கள் கல்வித் தகுதிகளை முதலில் தரலாம்.
கல்வித்தகுதி:
இந்த பகுதியில், நீங்கள் என்னவெல்லாம் படித்தீர்கள் என்பதை பின்னோக்கி எழுத வேண்டும். அதாவது, முதலில் கல்லூரி படிப்பு, மதிப்பெண் விபரங்கள், அதன்பிறகு, 12 ஆம் வகுப்பு, அதைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு என்றவாறு இருக்க வேண்டும்.
உங்கள் பயோடேட்டாவை உருவாக்கும் போது, உங்கள் பணி சாதனைகள் மற்றும் முக்கிய வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு பொருந்தக்கூடிய உங்கள் திறமைகளையும் அனுபவத்தையும் முன்னிலைப்படுத்தவும். ஏதேனும் பிழைகள் இருந்தால் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, ஒரு கவர் கடிதத்தை சேர்க்கவும். இது சந்தைக்கு உதவும் உங்கள் திறன்கள் மற்றும் உங்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் கூடுதல் தகவல்களை முதலாளிக்கு வழங்கவும் ஆளுமை.
முன்பெல்லாம், ரெஸ்யூம் தயாரிப்பது, மிகவும் சவாலான வேலை. நண்பர்கள், உறவினர்கள் தயாரித்து வைத்த ரெஸ்யூம்களை வாங்கி, அதில் நம்முடைய விவரங்களை நிரப்பி, தயாரிப்போம்.
ஆனால் அந்த நிலைமை இன்றில்லை. கூகுளில் ரெஸ்யூம் என்று தட்டினால், பல நூறு இணையதளங்கள் வந்து நிற்கின்றன. அதில் ஏற்கனவே தயாரித்த ரெஸ்யூம் மாடல்களில் தொடங்கி, உங்களுடைய கற்பனைக்கு ஏற்ப தயாரித்து கொடுக்க காத்திருக்கும் இணையதளங்கள் வரை எல்லாவற்றையும் இலவசமாகவே பயன்படுத்த முடியும்.
இயல்பான ரெஸ்யூம்கள் இலவசமாகவும், ஒருசில ரெஸ்யூம்கள் சில நூறு ரூபாய்களிலும் கிடைக்கின்றன. இதன் மூலம், யாரும் தயாரிக்காத புதுமையான மற்றும் கற்பனை திறன் நிரம்பப்பெற்ற ரெஸ்யூம்களை, உங்களால் உருவாக்க முடியும். வேலை தேடிச் செல்லும் நிறுவன அதிகாரிகளை ‘இம்பிரஸ்’ செய்ய முடியும்.