epic information வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா இல்லையா ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
epic number search வாக்காளர் பட்டியல் பாகம் எண் வரிசை எண் தெரிந்து கொள்வது எப்படி
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் செய்ய டிச 12-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
வரைவு வாக்காளர் பட்டியல் அக்.27-ம் தேதி வெளியிடப்படும். மேலும் அன்றே வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும். அன்று முதல், டிச.12-ம்தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்களை வழங்கலாம். மேலும், இந்த காலகட்டத்தில் நவ.4,5 மற்றும் 18, 19 ஆகிய சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பம் பெறப்படும்.அதைத் தொடர்ந்து, டிச.26-ம்தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறும். அதன்பின் அடுத்தாண்டு ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும்
https://voterportal.eci.gov.in/
ஆகிய இணையதள முகவரி மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா :-
ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா இல்லையா தெரிந்து கொள்ள முடியும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வாக்காளர்கள் 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அந்த செல்போன் எண்ணிற்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பும் அந்த பதிலில் வாக்காளரின் பெயர், முகவரி, வாக்குப்பதிவு மையம் உள்ளிட்டவையின் விபரம் இருக்கும்.
முதலில் உங்கள் மொபைல் போனில் ECI ஸ்பேஸ் “வாக்காளர் எண்” டைப் செய்து 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க உடனடியாக உங்கள் மொபைல் போனுக்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை விவரம் எஸ்.எம்.எஸ். ஆக வரும்
உதாரணத்திற்க்கு: ECI xxxxxxxx to 1950 Send this SMS to 1950 for getting information
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி:-
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று பார்ப்பது எப்படி முதலில் கீழே உள்ள Link click செய்யுங்கள்
https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட்டு சர்ச் செய்யுங்கள் உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும்
அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
தேர்தல் ஆணைய அதிகாரபூர்ப ஆப் மூலம் சரிபார்ப்பது எப்படி:-
https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen
மேல் உள்ள லின்ங் கிளிக் செய்து தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள்
அதில் உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும்.
அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்
இந்திய தேர்தல் ஆனைய இணையதளம் மூலம் சரிபார்ப்பது எப்படி:-
https://electoralsearch.eci.gov.in/ மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அடுத்து வரும் பக்கத்தில் Search by EPIC என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
அடுத்து அதில் உங்கள் வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணை பதிவிடுங்கள்
அடுத்து அதில் உங்கள் மாநிலத்தை செல்லக்ட் செய்து கொள்ளுங்கள்
அடுத்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சர்ச் செய்யுங்கள்
உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும்
அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்