JOB

2222 Graduate Teaching posts பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

trb recruitment 2023 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா

2222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதில் தமிழ் – 394, ஆங்கிலம் – 252, கணிதம் – 233, மற்றும் இயற்பியல் – 292 என மொத்தம் 2,222 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் நவம்பர் 30-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க:- teacherswww.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெற 45 மதிப்பெண்களும், பொது பிரிவை சேர்ந்த பட்டதாரிகள் தேர்ச்சி பெற 60 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி மாதம் 7ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 01-11-2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2023

தேர்வு நடைபெறும் நாள்: 07-01-2024

இளநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்திருப்பதுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -II -இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2,222 Graduate Teaching posts
2,222 Graduate Teaching posts

Related Articles

Back to top button