CINEMA

bigg boss 7 wild card entry பிக் பாஸ் 7 வைல்டு கார்டு கண்டஸ்டன்ட் யாரெல்லாம் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல் இதோ

bigg boss 7 பிக்பாஸ் வைல்டு கார்டு எண்ட்ரி யார் யார் தெரியுமா

பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

bigg boss 7 tamil elimination
bigg boss 7 tamil elimination

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரை, வெளியேறினார்கள் , மேலும் கடந்த வாரம் விஜய் வர்மா வெளியேறினார் மேலும் இந்த சீசன் டைட்டில் வின்னர் பிரதீப் ஆண்டனி தான் என்றும் இப்பவே ஆர்மி ஆரம்பித்துள்ளனர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார்.

அதுமட்டுமின்றி 29-ஆம் தேதி நடைபெற உள்ள எபிசோடில் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவுள்ளார்கள் என நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார் வழக்கமாக வைல்ட் கார்ட் ஏனென்றால் ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் .

ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்கள். இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் அந்த ஐந்து போட்டியாளர்கள் குறித்த விவரம் தற்போது இணையத்தில் கசிந்து உள்ளது.அதன்படி, சத்யா, விஜே அர்ச்சனா, கானா பாலா, மாகாபா ஆனந்த், பப்லு பிரித்விராஜ், உள்ளிட்ட பிரபலங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதிகாரப்பூர்வமாக யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் வரும் 29-ஆம் தேதி தான் தெரிய வரும்

Related Articles

Back to top button