Kerala Bomb Blast News குண்டு வைத்தது நான் தான் சரணடையும் முன் கொடுத்த வாக்கு மூலம் வீடியோ
Man surrenders before Kerala Police கேரள குண்டு வெடிப்பு காரணம் என்ன
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நேற்று குண்டு வெடிப்பு நிகழந்தது அதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த 29 பேரில் மேலும் 2 பேர் தற்போது உயிரிழந்துள்ளார்கள்
கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில், அரங்கங்களில் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் மாநாட்டு அரங்கின் ஒன்றில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, காலை 9.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடித்த இடத்தில் NIA சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைத்த NIA அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வறுகின்றனர்.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர், திருச்சூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் தற்போது அந்த நபரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல்நிலையத்தில் சரணடைந்துள்ள டொமினிக் மார்ட்டின், போலீசாரிடம் சரணடைவதற்கு முன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க:-
Confession Video – Dominic Martin
Nb : The authorities are yet to confirm the authenticity of the claim. Awaiting official responses#Kerala #Blast pic.twitter.com/gilstuuJwQ
— ForumKeralam (@Forumkeralam2) October 29, 2023