tangedco awareness message ஈ.பி பில் கட்டவில்லை என மெசஜ் வந்தா கிளிக் செய்யாதீர்கள் மின் வாரியம் எச்சரிக்கை
மின் வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை மெசஜ்
தமிழகத்தில் மின் கட்டணம் கட்டவில்லை என்றும் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி, அதில் லிங்கை க்ளிக் செய்ய வைத்து மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது மின் வாரியம் தன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
ஈ.பி பில் கட்டவில்லை என மெசஜ் வந்தா கிளிக் செய்யாதீர்கள் மின் வாரியம் எச்சரிக்கை
தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்:-
ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனம்!
1. பதட்டம் அடைய வேண்டாம்
2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும் இது ஒரு மோசடி மெசேஜ்!என அறிவித்துள்ளது
மின்சார கட்டண செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதோ சில குறிப்புகள்:
1. குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும்.
2. செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கும்.
3. சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:// மற்றும் பூட்டு 🔒 இல்லாமல் இருக்கும்.
4. தொடர்பு கொள்பவர் வேற்றுமொழி உச்சரிப்புடன் பேசுவர்.
5. சிறிய தொகையான ₹10 மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறுவர்.
6. உடனே எச்சரிக்கை ஆகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பை துண்டிக்கவும்.
புகார் அளிக்க: கட்டணமில்லா தொலைபேசி 1930
இணையம்: https://cybercrime.gov.in
சமூக ஊடகம்: @tncybercrimeoff