INTERNATIONAL NEWS

No Visa to visit Thailand தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை முழு விவரம்

Indians can visit Thailand visa free இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை

தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை..

தாய்லாந்து சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை எனவும் தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் சுற்றுலாத்துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் விதமாக தாய்லாந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு விசா தேவையில்லை என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும், சுற்றுலா வரும் இந்தியர்கள் விசா இல்லாமல், 30 நாட்கள் தங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதே போல், கிழக்காசிய நாடான தைவானில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கும் விசா தேவையில்லை என, தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை முழு விவரம்
தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை முழு விவரம்

Related Articles

Back to top button