CINEMA

leo success meet kutty story லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியது என்ன , குட்டி ஸ்டோரி முழு விவரம்

leo vijay kutty story லியோ வெற்றி விழா நடிகர் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.படம் வெளியான 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படத்திற்கான வெற்றி விழா நேற்று இரவு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

leo success meet kutty story
leo success meet kutty story

விழாவில் பேசிய நடிகர் விஜய்:- 

விஜய் மேடை ஏறியதும் ரஞ்சிதமே ஸ்டைல் முத்தங்களை காற்றில் ரசிகர்களுக்கு பறக்கவிட்டார். பின்னர் நான் ரெடி தான் பாடலை பாடி சில ஸ்டெப்புகளை போட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.”என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில் நீங்க எல்லாம் இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம் ஆனால், நீங்க எனக்கு காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்” என பேசி விஜய் அரங்கத்தை அதிர வைத்தார்.எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும், அதுக்கு நம்ம பசங்க தான் காரணமா இருக்கனும் என்று அவர் கூறினார்.

குட்டி ஸ்டோரி :-

ஒரு காட்டில் யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு, இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்னும் கிடைக்காம திரும்பி வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்..? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர்… எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க. நம்மளால எதை ஜெயிக்க முடியுமோ அதை செய்வோம். ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு இடம் இருக்கும். பெருசா கனவு கானணும் நண்பா” என்றார்

சூப்பர் ஸ்டார்:-

புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருத்தர் தான். நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான். உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான். தல என்றால் ஒருத்தர் தான்.தளபதி என்றால் உங்களுக்கு தெரியும். மன்னர்களுக்கு கீழ் அவங்க இருப்பாங்க. இங்கே மக்கள் தான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்,” என விஜய் கூறினார்.

2026 கப்பு முக்கியம் பிகிலு:-

நிகழ்ச்சித் தொகுப்பாளர் 2026-ம் ஆண்டு குறித்து கேள்வி எழுப்ப, நடிகர் விஜயோ, “என்ன உலகக்கோப்பையா?” என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். பின்னர் அவரே தொடர்ந்து, “கப்பு முக்கியம் பிகிலு” என்று குறிப்பிட ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

Related Articles

Back to top button