Vaikunta Ekadasi 2023 திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது, டிக்கெட் முன்பதிவு முழு விவரம்
vaigunta vaasal in thirupathi
திருப்பதியில் டிசம்பர் 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 2024 ஜனவரி 1 வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய நாள் ஒன்றுக்கு 70,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்படும்.
இதற்காக வைகுண்ட வாசல் திறந்திருக்கும் நாட்களில் நாளொன்றுக்கு 22,500 என்ற அடிப்படையில் 300 ரூபாய் கட்டணத்தில் டிக்கெட்டுகள் இம்மாதம் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும்.
வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் தற்போது செயல்படும் கவுண்டர்களுடன் கூடுதலாக கவுண்டர்கள் அமைக்கப்படும்.
ஆன்லைன் டிக்கெட் எப்போது:-
சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இம்மாதம் 10 ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இலவச தரிசனம்:-
இலவச தரிசனம் மூலம் நாள் ஒன்றுக்கு 42,500 பேர் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களில் 4, 25,000 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம்.
இலவச தரிசன டோக்கன்கள் தேவையான பக்தர்கள் கவுண்டர்களுக்கு நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து அவற்றை பெற்றுகொள்ளலாம்.
டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் திருப்பதி உள்ள கவுண்டர்களில் டோக்கன்களை வாங்கி வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தி வழங்கப்படும்.