vaigai river வேகமாக நிரம்பி வரும் வைகை அணை 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
vaigai river news
வைகை அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.மேலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருவதால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், வைகை அணை வேகமாக நிரம்பி வருகின்றது. வைகை அணைக்கு நீர்வரத்து 3177 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 66.31 அடியாக உயர்ந்ததை அடுத்து, 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தற்போது, அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது