TamilNadu News

o panneerselvam news அதிமுக பெயர் கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

aiadmk flag and symbol using ops அதிமுக பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடைவிதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த விவகாரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது

அதிமுகவின் பெயர் பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு தடை
அதிமுகவின் பெயர் பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு தடை

அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

அஇஅதிமுக பெயர், அண்ணா படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சின்னத்தை பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுவதாகவும் என்னை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரனையில் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடைவிதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related Articles

Back to top button