Rashmika Fake Video போலியான மார்பிங் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை, ₹1 லட்சம் அபராதம் என மத்திய அரசு எச்சரிக்கை!
3 years imprisonment for publishing morphing video மார்பிங் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை
போலியான வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை, ₹1 லட்சம் அபராதம் என ஒன்றிய அரசு எச்சரிக்கை! போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார். போலி வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் அது போன்ற வீடியோவை வெளியீட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு செல்வது போல மார்பீங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. அது போலியான் வீடியோ என தெரியாமல் பலரும் ரஷ்மிகா இப்படியா உடை அணிவீர்கள்? என்பது போல இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பினார். ஆனால் அந்த வீடியோ AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும், ஒரிஜினல் வீடியோவில் இங்கிலாந்து வாழ் இந்திய பெண் ஜாரா படேல் என்பவர் இன்ஸ்டாவில் புகழ் பெற்றவர். அவருக்கு 4 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். அந்த பெண் கடந்த மாதம் 9ஆம் தேதி இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில்தான் அவருடைய முகத்திற்கு பதிலாக ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
வீடியோ வைரல் ஆன நிலையில் ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில்:- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த போலி வீடியோ குறித்து பேசுவதற்கே வருத்தமாக இருக்கிறது. உண்மையில் இப்படியான ஒன்று எனக்கு பயத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏஐ தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதால் பலரும் பாதிக்கப்படுகிறர்கள். ஒரு பெண்ணாக நடிகையாக எனக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் என்னுடைய குடும்பம், நண்பர்கள், என் நலம் விரும்பிகள் உள்ளிட்டோருக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன். எனக்கு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ இது போல் ஒன்று நடந்திருந்தால் நான் எப்படி கையாண்டிருப்பேன் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இது போன்று மேலும் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ராஷ்மிகா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் மார்ப்பிங் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.