whatsapp email verification இனி வாட்ஸப் ஓப்பன் செய்ய மொபைல் நம்பர் தேவையில்லை இ-மெயில் வெரிபிகேஷன் செய்யும் வசதி அறிமுகம்
வாட்ஸப் இ-மெயில் வெரிபிகேஷன் செய்யும் வசதி
இனி வாட்ஸப் ஓப்பன் செய்ய மொபைல் நம்பர் தேவையில்லை இ-மெயில் வெரிபிகேஷன் செய்யும் வசதி அறிமுகம் மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது,
அந்த வகையில் இமெயில் வெரிஃபிகேஷன் என்ற அம்சத்தை வாட்ஸ் ஆப் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் பயனரின் அடையாளத்தைச் சரிபார்க்க மொபைல் எண் தான் தற்போது உள்ளது ,ஆனால் அதற்கு மாற்றாக மின்னஞ்சல் மூலம் சரிபார்க்கும் வசதியை மெட்டா வந்திருக்கிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்த மொபைல் எண் இடத்தில் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை வாட்ஸ்அப்பில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் ஈமெயில் முகவரியை வேறு யாரும் அறிய முடியாது என்று மெட்டா நிறுவனம் உறுதி அளிக்கிறது
இருந்தாலும், இந்த மின்னஞ்சல் சரிபார்ப்பு அம்சம் வாட்ஸ்அப்பில் முதன்மையான வெரிஃபிகேஷன் முறையாக இருக்காது. இது வாட்ஸ்அப் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான கூடுதல் அம்சம் மட்டுமே. பயனரின் தொலைபேசி தொலைந்து போனாலோ, திருடு போனாலோ இந்த ஈமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் கைகொடுக்கும்.
இந்த அம்சம் இப்போது ஆண்டிராய்டு மொபைல்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்த ஈமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் கிடைக்கும். Settings பகுதியில் உள்ள Account பிரிவில் இந்த அம்சம் இருப்பதைப் பார்க்கலாம். இந்த வசதி விரைவில் எல்லா பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.