export business free training ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இலவச பயிற்சி
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி Entrepreneurship Development and Innovation Institute Three Days Export Opportunity Identification & Marketing
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த பயிற்சி வரும் 21.11.2023 முதல் 23.11.2023 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் ஆவணங்கள், விதிமுறைகள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.
ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்:தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – இ.டி.ஐ.ஐ 600 032. 044-22252081/22252082, 8668102600/ 86681 00181. முன்பதிவு அவசியம்
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி