Kerala Lawyer Guinness World Record 73 ஆண்டுகளாக வழக்கறிஞர் பணி கின்னஸ் சாதனை முழு விவரம்
MENON P BALASUBRAMANIAN Longest career as a lawyer 97 வயது வழக்கறிஞர் கின்னஸ் சாதனை
கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.பாலசுப்ரமணியன் மேனன் தனது 97வது வயதில் நீண்ட காலம் பணியாற்றிய வழக்கறிஞர் என்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.பாலசுப்ரமணியன் மேனன், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டபடிப்பு படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இது தொடர்பாக கின்னஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
கேரளாவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மேனன் நீண்டகாலம் வக்கீலாக பணியாற்றியது உறுதி செய்யப்பட்டு, உலக சாதனை புத்தகமான கின்னசில் கடந்த செப்., 11ல் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் அவர் 73 ஆண்டுகள் 60 நாட்கள் வழக்கறிஞராக பணியாற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப்படிப்பை முடித்த மேனன் 1950ம் ஆண்டு தனது சொந்த ஊரில் சிவில் தரப்பில் வழக்கறிஞராக பணியை துவங்கி, தன் 97 வயதிலும் வழக்குகளில் ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.