Jigarthanda Double x Review ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரை விமர்சனம்
லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரை விமர்சனம்
Jigarthanda Doublex Review
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன் இசை: சந்தோஷ் நாராயணன் இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்
கதை:-
1970 ம் ஆண்டில் கதை தொடங்குகிறது எஸ் ஜே சூர்யா SI ஆக இன்னும் காவல்துறையில் சேர இருக்கிறார்.அப்போது தன் காதலியை பார்க்க, கல்லூரிக்கு வர அங்கு 4 பேர் கொல்லப்படுகின்றார்கள் ஆனால் அந்த பழி எஸ் ஜே சூர்யா மேல் விழ அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் சிறையில் இருக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கு இரண்டு ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. அதாவது மிகப்பெரும் ரௌடியாக இருக்கும் சீசர் என்கிற ராகவா லாரன்ஸை கொல்ல வேண்டும் என்ற டாஸ்க் அவருக்கு கொடுக்கப்படுகிறது.
அப்படி செய்தால் விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல் அவர் விரும்பிய போலீஸ் வேலையும் கிடைக்கும் என்பதால் லாரன்ஸ்சை கொல்ல கிளம்புகின்றார் சூர்யா மதுரையில் இருக்கும் பயங்கரமான கேங்ஸ்டர் ஆலிஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்) ஹாலிவுட் நடிகரான கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகன் அவரது ஆசை ஹீரோவாகி, ஈஸ்ட்வுட் பட பாணி படங்களில் நடிக்க விரும்புகிறார்.
சினிமாவில் ஆர்வம் இருக்கும் லாரன்சை அதை பயன்படுத்திக் கொண்டு சத்யஜித் ரேயின் உதவியாளர் என்று ரே தாசனாக அறிமுகம் ஆகின்றார் எஸ்.ஜே. சூர்யா, லாரன்சும் எஸ்.ஜே. சூர்யாவிடம் தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க சொல்கிறார். ராகவா லாரன்ஸுக்கு போட்ட ஸ்கெட்ச் என்ன ஆனது, ராகவா லாரன்ஸ் மரணம் அடைந்தாரா, எச் ஜே சூர்யா என்ன ஆனார், திரைப்படம் எடுத்தாரா, என்பதுதான் மீதி திரைப்படம்