rain update tamil nadu வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை 9 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம்
நாளை 9 மாவட்டங்களில் கனமழை
வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை 9 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எனவே 14.11.2023 மற்றும் 15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசிலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது