ODI World Cup Reserve Day IND vs NZ அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்
IND vs NZ Semi Final ரிசர்வ் டே என்றால் என்ன
IND vs NZ Semi Final
இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது ICC Cricket World Cup போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிற்திப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் 1 மற்றும் 4ஆவது இடங்களில் உள்ள அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ள அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் மோதும்.
இந்த ICC Cricket World Cup போட்டியில் இதுவரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது விளையாடிய 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் +2.570 என்ற ரன் ரேட் கொண்டுள்ளது. ஆனால், நியூசிலாந்து விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் +0.743 என்று ரன் ரேட் கொண்டுள்ளது.
மும்பையில் நாளை 15 ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன
வரும் 16 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது.
நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது
மும்பையில் நாளை 15 ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா 1983, 2011-ம் ஆண்டு ICC Cricket World Cup வென்றுள்ளது. நியூஸி. ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை
போட்டியில் மழை குறுக்கிட்டால்:-
அதன்படி நாளை 15ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கின்றது இந்தப் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் 2ஆவது நாள் போட்டி நடத்தப்படும் என ICC அறிவித்துள்ளது
மேலும் ரிசர்வ் டே மற்றும் தொடருக்கான பரிசுத்தொகையையும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், தொடரின் வெற்றி அணிக்கு இதில் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் எனவும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரில் பங்கேற்ற 10 அணிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ரிசர்வ் டே என்றால் என்ன:- Reserve Day
இதற்கு முன்னதாக 2019 உலகக்கோப்பையில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரிசர்வ் டே வரைக்கும் சென்றிருந்தது. Reserve Day வில் தான் நியூசிலாந்து அந்தப் போட்டியையும் வென்றது இந்த உலககோப்பை தொடரிலும் அதேபோல் ரிசர்வ் டே உள்ளது
ஒருவேளை அரையிறுதிப் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் விட்ட இடத்திலிருந்து அந்த போட்டிகள் மீண்டும் தொடங்கும். ஒருவேளை ரிசர்வ் டேவிலும் மழை பெய்து போட்டியில் முடிவு எட்டப்படவில்லையெனில், லீக் போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை எடுத்திருக்கும் அணிகள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
இந்திய அணி லீக் போட்டிகளில் அத்தனை போட்டிகளையும் வென்றிருப்பதால் Reserve Dayவிலும் மழை பெய்தால் அது இந்தியாவிற்கு சாதகமானதாகவே அமையும். இந்த ஆண்டு உலகக் கோப்பையில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்றது, 1983 மற்றும் 2011 இல் முந்தைய வெற்றிகளுக்குப் பிறகு, மூன்றாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது.