NATIONAL NEWSTamilNadu News

from december 1 new rules in india இந்தியாவில் டிசம்பர் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிமுறைகள்

December 1 ALERT new rules டிசம்பர் 1 முதல் அமுலுக்கு வரும் விதிமுறைகள்

from december 1 new rules in india டிசம்பர் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள், என்ன தெரிந்து கொள்ளுங்கள்

from december 1 new rules in india
from december 1 new rules in india

சிலிண்டர் விலை உயர்வு:-

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளில் காஸ் சிலிண்டர் விலை மாறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன.

அடுக்குமாடி குடியிருப்பு பதிவு:-

தமிழகம் முழுவதும் இனி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிமனை (UDS) மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு கூட்டு மதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. 1 டிசம்பர் 2023 முதல் கூட்டு மதிப்பில் ஒரே பத்திரம் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதனால் முத்திரை தீர்வை கணிசமாக குறையும் என்றும் இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சிம்கார்டு :-

தொலைத்தொடர்பு துறையில் டிசம்பர் 1 முதல் புதிய விதிகள் அமுலுக்கு வருகின்றன. மொபைல் சிம் வாங்குவதற்கான விதிமுறைகளை அரசு கடுமையாக்கியுள்ளது. அதாவது முழு KYC இல்லாமல் எந்த ஒரு கடைக்காரரும் எந்த சிம்மையும் விற்க முடியாது. மறுபுறம், எந்தவொரு தனிநபரும் சிம் கார்டுகளை மொத்தமாக வாங்க முடியாது புதிய சிம் கார்டு வாங்கமோசடிகளை தடுக்கும் முயற்சியாக, தொலைத்தொடர்புத் துறை டிசம்பர் 1 முதல் சிம் கார்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. புதிய விதிமுறைகளின்படி அனைத்து சிம் கார்டு விற்பனையாளர்களும் தங்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

from december 1
from december 1

வங்கிகளில் கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரத்தை திரும்ப தராவிட்டால் நாளொன்றுக்கு ரூ.5,000 அபராதம்

வாடிக்கையாளா் கடனை முழுமையாக அடைத்த 30 நாள்களில் அவரது அசையும், அசையாத சொத்துப் பத்திரம், ஆவணங்களைத் திருப்பி அளித்துவிட வேண்டும் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 தாமதக் கட்டணமாக வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்று வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசா்வ் வங்கி உத்தரவு முழு கடனையும் திருப்பிச் செலுத்திய பிறகு, உத்தரவாதத்திற்குப் பதிலாக வைத்திருக்கும் ஆவணங்களை சரியான நேரத்தில் திருப்பித் தரவில்லை என்றால், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது. இந்த அபராதத்தை மாதம் ரூ.5,000 வீதம் செலுத்த வேண்டும்.

ஜிமெயில் அக்கவுண்ட்:-

பயன்பாட்டில் இல்லாதா ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது Gmail, Drive, Docs, Meet, Calendar, Photos மற்றும் YouTube உள்ளிட்ட நிறுவனத்தின் பிற ஆப்ஸ்களை பயன்படுத்த Google கணக்கு தேவைப்படுகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் முக்கிய தகவலை பகிந்துள்ளது. டிசம்பர் 1 முதல் இரண்டு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத அனைத்து கூகுள் கணக்குகளும் நீக்கப்படும் என்று கூறி உள்ளது. உங்கள் வேலை, பள்ளி அல்லது பிற அமைப்பு மூலம் உங்களுக்காக அமைக்கப்பட்ட எந்தக் கணக்கும் தானாக நீக்கப்படாது. இந்த புதிய கொள்கை தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளது

டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்
டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்

ஆதார் அப்டேட்:-

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தின்படி, கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம். ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, UIDAI 10 வயதுடைய ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை சமீபத்திய தகவலுடன் புதுப்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

செயல்படாத UPI ஐடி:-

Google Pay, Paytm, PhonePe போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடி எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) கேட்டுக் கொண்டுள்ளது. நவம்பர் 7, 2023 அன்று அனைத்து UPI உறுப்பினர்களுக்கும் NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, டிசம்பர் 1ஆம் திகதிக்குள் UPI ஐடிகள் செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அவை செயலிழக்கப்படும்.

from december 1 new rules in india

Related Articles

Back to top button