telangana election results தெலுங்கானாவில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்! ஆட்சியை கைப்பற்றுமா?
தெலுங்கானாவில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்
telangana election results நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
காலை 8 மணி முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு , அதன்பிறகாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது .தெலுங்கானா தனி மாநிலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் சந்திரசேகர ராவின் , பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி மீண்டும் முன்னிலை பெற்று கேசிஆர் “ஹாட்ரிக்” அடித்து முதல்வராவார் என கூறப்பட்டு வந்த நிலையில்,
தெலுங்கானா மாநிலம்:-
தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 60 சட்டமன்ற தொகுதிகள் தேவை
தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது
தற்போது தேர்தல் முன்னனி நிலவரம் காங்கிரஸ் கட்சி :- 61 தொகுதிகளில் முன்னிலை
பிஆர்எஸ் கட்சி :- 30 தொகுதிகளில் முன்னிலை
பா.ஜ க :- 9 தொகுதிகளில் முன்னிலை
மற்றவை :- 6 தொகுதிகளில் முன்னிலை
காங்கிரஸ் முன்னிலை பெற்று முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 30 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 10 ஆண்டுகால பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி இந்த தேர்தலில் முடிவுக்கு வந்துவிடும்.
தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ ரிசல்ட் பார்க்க;-