Conjuring Kannappan Review கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்
conjuring kannappan movie review in tamil நடிகர் சதிஷின் கான்ஜுரிங் கண்ணப்பன் திரைபடம் விமர்சனம்
Conjuring Kannappan Review
நடிகர்கள்:-
சதீஷ் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், நமோ நாராயணா, ஆதித்யா கதிர்
இசை:- யுவன்சங்கர் ராஜா
இயக்கம்:- செல்வின் ராஜ் சேவியர்
தயாரிப்பு:- ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம்
கதை:-
வீடியோ கேமிங் துறையில் சிறந்து விளங்கும் சதீஷ் அதே துறையில் வேலை தேடி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் பின்பக்கம் பாழைந்த கிணற்றிலிருந்து விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டி அடிக்கப்படுகின்றார், தூங்கி எழுந்தால் பேய்களால் அடிக்கபட்ட காயங்கள் உடலில் உள்ளது. அந்த சூனியம் செய்து வைக்கப்பட்டிற்கும் அந்த மர்ம பொருளில் இருந்து இறகை எடுத்ததால் தான் இதுபோல் நடந்தது என தெரிந்து கொள்கின்றார்
அவர் நாசரிடம் இது பற்றி கேட்க இது டீரீம் கேட்சர் என்றும் இது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று எச்சரிக்கிறார். அதில் இருந்த இறக்கையைப் பிய்த்திருக்கக் கூடாது எனவும் கூறுகின்றார் , இதற்க்கிடையில் அவர் மட்டும் இல்லாமல், அவரது குடும்பம் நண்பர்கள் என அவரை சார்ந்துள்ள அனைவரும் அதில் உள்ள இறகை பிய்த்து அந்த கனவுலகில் சிக்கிகொள்கின்றனர்.
அந்தக் கனவுலகில் இருந்து வெளியே வர, அதற்கான ஒரு சாவியை கண்ணப்பன் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே ஏழுமலை சொல்லும் தீர்வு. இதனையடுத்து சாவியை கண்டுபிடித்து கனவுலகில் இருந்து மீண்டார்களா , பேயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.
Conjuring Kannappan trailer click Here