kilambakkam new bus stand தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல CMBT நிர்வாகம் அறிவுறுத்தல்!
kilambakkam bus terminus கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து எந்த எந்த பேருந்து செல்லும்
kilambakkam new bus stand தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல CMBT நிர்வாகம் அறிவுறுத்தல்!
சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் போக்குவரத்தால் கடும் நெரிசல் ஏற்படுகின்றது .இதனை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாகம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் மிக பிரம்மாண்ட பேருந்து நிலைய பணிகள் கடந்த 2019 ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது .
இந்நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நாளை டிச.30 ம்தேதி திறந்து வைத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகபிரமாண்டமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவகலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தனியாக காவல் நிலையமும் உள்ளது
தென்மாவட்ட மக்களுக்கான பேருந்துகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள CMBT நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து சென்னை வரும் SETC பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான, TNSTC பேருந்துகள் தற்போது கோயம்பேட்டில் இருந்தே இயங்கும் எனவும், பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இப்பேருந்துகள் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
kilambakkam new bus stand
https://www.linkedin.com/company/chennai-metropolitan-development-authority-cmda-