Govt bus strike threat from January 9 பேச்சுவார்த்தை தோல்வி நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் முழு விவரம்
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Govt bus strike threat from January 9 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 9 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக AITUC, CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்த்திருந்தது
இந்நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 6 கோரிக்கைகளில் 2 மட்டும் ஏற்கப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது திட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது