TamilNadu News

pongal special train 2024 சென்னை நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் முழு விவரம்

Pongal special trains to be operated between Tambaram to tirunelveli

pongal special train 2024 பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு.. எந்த எந்த ஊருக்கு தெரியுமா.? தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய செய்தி

பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் இந்நிலையில் தென்னக ரயில்வே தென் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்டும் என அறிவித்துள்ளது

அதன்படி பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி தாம்பரத்தில் இருந்து மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கப்படுகின்றது வியாழன், சனி மற்றும் செவ்வாய்கிழமை தாம்பரத்தில் இருந்து இந்த ரயில் புறப்படுகிறது அதேபோல் மறுமார்க்கமாக சனி, திங்கள் மற்றும் வியாழன் என்று நெல்லையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்

pongal special train 2024
pongal special train 2024

சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்:-

ஜன.11,13,16ம் தேதிகளில் இரவு 9.50 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06003) மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்

ஜன.12,14,17ம் தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06004) மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

சிறப்பு ரயில் செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, அம்பை, சேரன்மகாதேவி வழியாக இயக்கப்படுகிறது

இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள்
சென்னை நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள்

pongal special train 2024

CLICK HERE

Related Articles

Back to top button