TamilNadu News

Aastha special train தமிழகத்தில் இருந்து ராமர் கோயில் தரிசனத்திற்கு அயோத்தி செல்ல ஆஸ்தா சிறப்பு ரயில்கள் முழு விவரம்

அயோத்தி செல்ல ஆஸ்தா சிறப்பு ரயில்கள்

Aastha special train தமிழகத்தில் இருந்து அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபட விரும்பும் பக்தர்களுக்கு வசதியாக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் 3 ஆயிரம் விவிஐபிகள் உள்ளிட்ட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aastha special train
Aastha special train

ஜனவரி 23ஆம் தேதி முதல் அனைத்து தரப்பினரும் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புவர்.

இந்நிலையில் அயோத்திக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் வசதிக்காக ஆஸ்தா சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. ஆஸ்தா என்றால் நம்பிக்கை என்று அர்த்தமாகும். கடவுள் ராமர் மீதான பக்தர்கள் நம்பிக்கையைக் குறிக்கும் பொருட்டு இந்த ரயில்களுக்கு ஆஸ்தா ரயில்கள் என்று ரயில்வே அமைச்சகம் பெயர் சூட்டியுள்ளது. இ

ந்திய நாட்டின் 66 நகரங்களில் இருந்து 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aastha special train tamilnadu
Aastha special train tamilnadu

டிக்கெட்டுகளை பொறுத்தவரை அயோத்திக்கு செல்லவும், மீண்டும் சொந்த ஊர் திரும்பவும் சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 22ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி செல்ல ரயில் போக்குவரத்து:- சென்னையில் இருந்து வாரணாசி நகருக்கு செல்லக்கூடிய ரயிலில் சென்று, பின்னர் அங்கிருந்து அயோத்தி நகருக்கு நேரடி ரயிலில் பயணிக்கலாம். அதேபோல லக்னோ, டெல்லி, அலகாபாத் மற்றும் கோராக்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்தி மாநகருக்கு நேரடி ரயில் போக்குவரத்து சேவை இயக்கப்படுகிறது.

Aastha special train

Ticket Booking More Details Click here

Related Articles

Back to top button