TamilNadu News

Republic Day celebrations Traffic diversions in Chennai குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்வு – சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

Republic Day celebrations Traffic diversions in Chennai  சென்னையில் குடியரசு தின விழா வருகிற 26ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, ஜனவரி 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 19, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய 4 தினங்களில் ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா சதுக்கம், பாரிமுனை, வாலாஜா சாலை , அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி

Republic Day celebrations Traffic diversions in Chennai
Republic Day celebrations Traffic diversions in Chennai

*மேற்கண்ட 4 தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 7.00 மணி முதல் 9:30 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

*அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்கடேச அக்ரகாரம் தெரு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தான்சன் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் ரோடு ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

*அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) காந்திசீலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பபட்டு ராயபேட்டை 1 பாயீண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் ரோடு, ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

*மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயபேட்டை 1 பாயீண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ (அ) வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மடம் சாலை, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.

*டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி விடப்படும்.

*டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

*காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

*வாலாஜாசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும் .

*அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும்.

*பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜீ.பி.ரோடு, இராயபேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜீ.ஆர்.எச். அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் (அ) வலதுபுறம் திரும்பி டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

*அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

Republic Day celebrations Traffic diversions
Republic Day celebrations Traffic diversions

Republic Day celebrations Traffic diversions in Chennai

More Details:- Click Here

Related Articles

Back to top button