Indias most qualified person 49 வயதிற்குள் 42 டிகிரியை முடித்தவர்
இந்தியாவின் அதிகம் படித்த நபர்
Indias most qualified person 49 நமக்கு 1 டிகிரியை முடிக்கவே பெரும் சவாலாக இருக்கும் போது, இங்கு ஒருவர் 42 டிகிரியை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.இது மட்டும் இல்லாமல் MBBS, MD பட்டங்களைப் பெற்ற பிறகு, சிவில் சர்வீஸ் தேர்வை முடித்து போதாது என்று அரசியலிலும் கலம் கண்டுள்ளார்.
இந்தியாவில் ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீகாந்த் ஜிச்கர் ஒரு அரசியல்வாதியாகவும், சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் மற்றும் ஆராய்ச்சியாளர், மருத்துவர், வழக்குரைஞர், பத்திரிகையாளர், என பன்முகங்கள் கொண்ட சிறந்த திறமைசாலி.
மகாராஷ்டிராவில் செப்டம்பர் 14, 1954 பிறந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர் ஆரம்பத்தில் இருந்தெ மிகவும் பிரகாசமான மாணவராக இருந்தார், இந்தியாவின் மிகவும் படித்த நபராக ஸ்ரீகாந்த் ஜிச்கர் கருதப்படுகிறார்.
அவரது முதல் பட்டங்கள் நாக்பூர் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில் MBBS மற்றும் MD அதைத் தொடர்ந்து அவர் பொது நிர்வாகம், சமூகவியல், பொருளாதாரம், சம்ஸ்கிருதம், வரலாறு, ஆங்கில இலக்கியம், தத்துவம், அரசியல் அறிவியல், பண்டைய இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் தொல்லியல் ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்றார். சர்வதேச சட்டத்தில் முதுகலைப் பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், வணிக மேலாண்மை மருத்துவர், இதழியலில் இளங்கலைப் பட்டம், சம்ஸ்கிருதத்தில் இலக்கிய முனைவர் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
அவரது பெரும்பாலான பட்டங்கள் முதல் தகுதியுடன் இருந்தன, மேலும் அவர் தனது பட்டங்களுக்கு பல தங்கப் பதக்கங்களைப் பெற்றார். 1973 மற்றும் 1990 க்கு இடையில் அவர் 42 பல்கலைக்கழக தேர்வுகளை எழுதினார், ஒவ்வொரு கோடை மற்றும் ஒவ்வொரு குளிர்காலத்திலும் அவர் தனது தேர்வுகளை எழுதினார், மேலும் 20 பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
most qualified person in india
IASஅதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர் பணியில் இருந்து விலகி அரசியலில் நுழைந்து வெறும் 26 வயதில், இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
1978 ஆம் ஆண்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய காவல்துறை சேவை கேடரில், மத்திய அரசு ஊழியராக நியமிக்கப்பட்டார்.
IAS அதிகாரி ஆவதற்காக UPSC தேர்வை மீண்டும் எடுப்பதற்கு முன்பு 1980 இல் ஜிச்கர் கேடரில் இருந்து ராஜிநாமா செய்தார்.
IAS பணியில் சேர்ந்த சில வாரங்களிலேயே ஜிச்கர் தேர்தலில் போட்டியிட்டு MLA-வாக வெற்றி பெற்றார்.
IAS அதிகாரியாக இருந்த வேலையை ராஜினாமா செய்து அமைச்சரானார்.
மகாராஷ்டிரா அரசாங்கத்தில் மாநில அமைச்சராகப் பணியாற்றிய ஸ்ரீகாந்த் ஜிச்கர் , 1980 முதல் 1985 வரை மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகவும், 1986 முதல் 1992 வரை மகாராஷ்டிரா சட்டப் பேரவை உறுப்பினராகவும் . மேலும் 1992-1998 இல் அவர் ராஜ்யசபா MP யாகவும் பணியாற்றிள்ளார்.
Indias most qualified person
ஸ்ரீகாந்த் ஜிச்கர் அவரது 49 வது வயதில் ஜூன் 2, 2004 ஆம் ஆண்டில் நிகழந்து கார் விபத்தில் உயிரிழந்தார். ஆனால் அவர் தனது பெயரை இந்திய வரலாற்றில் நிரந்தரமாக விட்டு சென்றுள்ளார்.
For more details