TamilNadu News

Woman Wants Divorce After Husband Took Her To Ayodhya Instead Of Goa For Honeymoon

தேனிலவிற்க்கு கோவாக்கு பதில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்ற கணவர் விவாகரத்து கோரிய மனைவி!

Woman Wants Divorce After Husband Took Her To Ayodhya Instead Of Goa For Honeymoon தேனிலவிற்க்கு கோவாக்கு பதில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்ற கணவர் விவாகரத்து கோரிய மனைவி!

Woman Wants Divorce After Husband Took Her To Ayodhya Instead Of Goa For Honeymoon தேனிலவிற்க்கு கோவாக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைத்துச்சென்றதால் தனது கணவரிடம் இருந்து விவாகரத்துக்கோரும் போபாலை சேர்ந்த பெண்!

Woman Wants Divorce After Husband Took Her To Ayodhya Instead Of Goa For Honeymoon
Woman Wants Divorce After Husband Took Her To Ayodhya Instead Of Goa For Honeymoon

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள பெண் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்துள்ளது. ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண் தனது கணவர் தேனிலவிற்க்கு வெளிநாட்டிற்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது கணவர் தனது பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று கூறி அதை நிராகரித்துள்ளார்.

அதன்பின்பு தேனிலவுக்காக கோவா செல்ல திட்டமிட்டு ஏற்பாடு செய்தனர் ஆனால் கணவரின் தாய் அயோத்தியில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டைக்கு செல்ல விரும்புவதாகவும் தன்னை அழைத்து செல்லவேண்டும் என கூறியதை அடுத்து அவரது கணவர் அயோத்தி மற்றும் வாரணாசிக்கு செல்வதற்காக விமான டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளார். ஆனால், இதனை தனது மனைவியிடம் அவர் தெரிவிக்கவே இல்லை.

இந்த நிலையில், தேனிலவிற்கு செல்வோம் என்று ஆசையாக காத்திருந்த மனைவியிடம், தேனிலவிற்கு செல்வதற்கு ஒரு நாள் முன்பாக அவரது கணவர் கோவாவிற்கு பதிலாக நாம் அயோத்தி செல்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும், இது தனது தாயாரின் நீண்ட நாள் ஆசை என்றும் கூறியுள்ளார்.இதனால், அவரது மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

மனவேதனை அடைந்த அந்த பெண் எந்த பிரச்சனையையும் செய்யாமல் அவர்களுடன் அயோத்தி சென்று வந்துள்ளார் அதன் பின்பு கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். விவாகரத்து மனுவில் தனது கணவர், தன்னை விட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Woman Wants Divorce After Husband Took Her To Ayodhya Instead Of Goa For Honeymoon

News Source:- Click Here

Related Articles

Back to top button