health

benefits of daily eating dates தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

benefits of daily eating dates தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:- வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால், உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம் பேரிச்சம் பழத்தில் கார்போ ஹைட்ரேட், க்ளுகோஸ், ப்ரக்டோஸ், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் (தாது உப்புகள்) மற்றும் பாலிபீனால்கள், பீனாலிக் அமிலம் நிறைந்துள்ளது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகின்றது.

benefits of daily eating dates
benefits of daily eating dates

இதில் இற்கையான இனிப்பு இருப்பதால் உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது. இதில் நார்சத்து, இரும்பு சத்து இருக்கிறது. மேலும் இதில் சுத்தமாக கொழுப்பு சத்து இல்லை என்பதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பேரிச்சம்பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன மற்றும் அவை சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட இயற்கை சர்க்கரைகளைக் கொண்டிருப்பதால் விரைவான ஆற்றலை அதிகரிக்கின்றன. அவை உணவு நார்ச்சத்து சிறந்த மூலமாகும், இது செரிமாம் எளிதாக்குகிறது மற்றும் முழுமையின் உணர்வை அதிகரிக்கிறது.

தாமிரம், மெக்னீசியம், செலினியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் நிறைந்த, ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்களைத் தடுக்கவும் பேரீச்சம்பழம் உதவுகின்றது

கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பிணி அல்லாத பெண்களை விட ஒரு நாளைக்கு 300 கலோரிகள் அதிகம் தேவைப்படுகிறது. பேரீச்சம்பழத்தில் கலோரிகள் அதிகம் ஆனால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது கர்ப்ப காலத்தில் மூல நோயைத் தவிர்க்க உதவும். என்ஐஎச் படி, பிரசவத்திற்கு முன் நான்கு வாரங்களில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது சிறந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

அதேபோல் தினமும் பேரித்தம் பழங்களை சப்பிட்டு வந்தால் அதில் உள்ள இரும்பு சத்து பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை சரியாக்கும் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைத்து, உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க பயன்படுகிறது ஆண்களின் விந்தணு விருத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும். தாது விருத்தியுண்டாகும். இரவில் படுக்கும் பொழுது இதை சாப்பிட வேண்டும். காலை உணவுக்குப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவுக்குப்பின், 12 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு கப் பசும்பால் குடிக்க வேண்டும். அதேபோல் காலை 10 பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பால் குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும்.

பேரிச்சம்பழத்தினை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால்:-

ஒரு கண்ணாடி பாட்டிலில் விதையில்லாத பேரிச்சம் பழத்தைப் போட்டு, தேன் ஊற்றி மூடி வைத்து 10 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும். பேரிச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபடலாம். தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும். முக்கியமாக இதனால் குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும் பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறையும்.

benefits of daily eating dates

more details 

Related Articles

Back to top button