GIC introduced new scheme for treatment in all hospitals அனைத்து மருத்துவமனைகளிலும் பணமின்றி சிகிச்சை முழு விவரம்2024
அனைத்து மருத்துவமனைகளிலும் பணமின்றி சிகிச்சை ஜி.ஐ.சி யின் அறிமுகம்
GIC introduced new scheme for treatment in all hospitals ஜி.ஐ.சி., என்னும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில், அனைத்து மருத்துவமனைகளிலும் பணமின்றி சிகிச்சை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மருத்துவ காப்பீடு எடுத்த ஒருவருக்கு தற்போது உள்ள நடைமுறைகளின்படி, அவர் எந்த காப்பீடு எடுத்தாரோ அந்த காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான பணத்தை மருத்துவமனைகளுக்கு வழங்கும்.
காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அவர் தனது கையிலிருந்து பணத்தை செலவு செய்ய வேண்டும்.அதன்பின்பு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தாங்கள் செலவழித்த பணத்தை பெற முடியும்.
இந்நிலையில் இனி பாலிசிதாரர்கள் தங்கள் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க்கின் கீழ் இல்லாத பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை. அவர்களின் காப்பீட்டு நிறுவனமே அந்த பணத்தை செலுத்தி விடும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த புதிய திட்டம் குறித்து
ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலின் தலைவரான தபன் சிங்கேல் பாலிசிதாரர்கள் மீது, குறிப்பாக காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது, தற்போதைய விதிமுறைகள், கடும் அழுத்தத்தையும், நீண்ட பெரிய செயல்முறைகளையும் ஏற்படுத்துகிறது.
மருத்துவக் காப்பீடு எடுக்கும் ஒருவர், அதன் கீழ் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது, காப்பீட்டுப் பணத்தை கோரி பெறுவது என்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அதோடு அல்லாமல், சிகிச்சைக்காக செலவிட்டத் தொகையில் ஒரு சிறு பகுதியே திரும்பப் பெறும் வகையில் கொள்கைகள் அமைந்திருக்கும். இந்த புதிய அறிவிப்பினால் அந்த சிக்கல் தீர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
GIC introduced new scheme for treatment in all hospitals
More Details
https://www.gicre.in/en/