300 units of free electricity per month வீடுகளில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – மத்திய அரசு அறிவிப்பு முழு விவரம்
300 யூனிட் மின்சாரம் இலவசம்
300 units of free electricity per month மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் லைவ் அப்டேட் பார்க்க நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்.! பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
இதனை அடுத்து வரும் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக உள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளார்.
அதில் வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது அதனை தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சராக ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நபராக நிர்மலா சீதாராமன் உள்ளார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேரலையில் பார்க்க
Budget 2024 Live பார்க்க CLICK HERE