Vadakkupatti Ramasamy Review tamil சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரை விமர்சனம்
Vadakkupatti Ramasamy Review காமெடியில் கலக்கும் வடக்குப்பட்டி ராமசாமி
Vadakkupatti Ramasamy Review tamil சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரை விமர்சனம் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் கார்த்தி யோகி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட விமர்சனம் பற்றி பார்ப்போம்
நடிகர்கள்:-
சந்தானம், மேகா ஆகாஷ் , சேஷு, மாறன் , நிழல்கள் ரவி மொட்டை ராஜேந்திரன் ரவிமரியா, ஜான் விஜய், கூல் சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர்
இசை:- ஷான் ரோல்டன்
இயக்கம்:- கார்த்திக் யோகி.
கதை:-
கதை 1970 களில் நடப்பது போல் காட்டப்பட்டுள்ளது சிறு வயதில் பானை செய்து விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனாக வடக்குப்பட்டி ராமசாமியை காட்டுகின்றனர். ஆனால், பானையை யாருமே வாங்கவில்லை என்பதால் வறுமையில் இருந்து மீள்வதற்காக என்ன செய்யலாம் என யோசிக்கின்றார் மேலும் இந்த கிராமம் அனைத்து பக்கங்களிலும் நீர் நிலைகளாலும் சூழப்பட்டு கிராமத்திற்குள் செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு பாலம் மட்டுமே உள்ளது. மேலும் அந்த ஊரே காட்டேரியால் பயந்து கொண்டுள்ளார்கள்,
இந்நிலையில் ராமசாமியினுடைய பானையை திருடன் ஒருவன் திருடி செல்கிறார். அப்போது காட்டேரி பானையால் வீழ்த்தப்படுவதால், காட்டேரியை பானை தான் கொன்றது என கிராம மக்கள் அந்த பானையையே அம்மனாக வழிபட தொடங்குகின்றனர். மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி, அந்த பானையை வைத்து ஒரு சிறிய கோயிலை கட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி பெரும் பணம் சம்பாதிக்கின்றார் ராமசாமி.
கோவில் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தன்னுடைய வசதியான வாழ்க்கையை வாழ்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அந்த ஊருக்கு தாசில்தார் வருகிறார். கோவில் மூலம் மக்களை ஏமாற்றி பிழைக்கும் ராமசாமியிடம் கோவில் வசூலில் பங்கு கேட்கின்றார் வட்டாச்சியர் அதற்க்கு சந்தானம் மறுக்கின்றார், மேலும் கோவில் நிலத்தை குத்தகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என ராமசாமிக்கு ஐடியா கொடுக்கிறார். அதற்காக பெரும் தொகையை கமிஷனாக கேட்கிறார்.உனக்கு நான் எதுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்கிறார் ராமசாமி.
இதனால் சந்தானத்தை வீழ்த்த நேரம் பார்த்து கொண்டு இருக்கின்றார். இந்நிலையில் கோவிலில் இரண்டு குடும்பங்களை மோத விட்டு சூழ்ச்சி செய்து கோவிலை இழுத்து மூடி விடுகிறார் தாசில்தார்.ஊர் இரண்டாகின்றது. அதன்பின்பு ஊரை ஒன்று சேர்த்தாரா, கோவில் திறக்கப்பட்டதா, தாசில்தாருக்கு பங்கு கொடுத்தாரா? தாசில்தாரை எப்படி கையாண்டார்? ராமசாமியின் உண்மை முகம் மக்களுக்கு தெரிந்ததா என்பதே படத்தின் மீதி கதை