TamilNadu News

Theft In National Award Winning Director M Manikandan’s House தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகைகள் கொள்ளை

Theft In National Award Winning Director M Manikandan’s House காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளவர் மணிகண்டன். காக்கா முட்டை திரைப்படத்திற்கு சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்ற தேசிய விருது கிடைத்த நிலையில் கடைசி விவசாயி படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது கிடைத்தது.

மதுரை மாவட்டம் உசுலம்பட்டியில் உள்ள எழில் நகரில் உள்ள அவரது வீட்டினை மணிகண்டனின் ஓட்டுநர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோர் பராமரித்து வந்துள்ளனர். மேலும், அந்த வீட்டில் உள்ள நாய்க்கும் அவர்கள் தினசரி உணவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நாய்க்கு உணவு வைக்கச் சென்ற நரேஷ்குமார், வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Theft In National Award Winning Director M Manikandan's House
Theft In National Award Winning Director M Manikandan’s House

பூட்டை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பீரோவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பீரோவில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிகண்டன் தற்போதைக்கு சென்னையில் இருக்கிறார், இதனால் உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால் மட்டுமே, எவ்வளவு பணம், நகை திருடு போயுள்ளது என்பது குறித்த மிக சரியான தகவல் தெரியவரும் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Theft In National Award Winning Director M Manikandan’s House

More Details

Related Articles

Back to top button