hariharan concert sri lanka யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிஹரன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் காரணம் என்னமுழு விவரம் வீடியோ இணைப்பு
hariharan concert sri lanka பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான யாழ்ப்பாணம் திறந்த வெளியில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களின் அத்துமீறலால் பாதிலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது என்ற தகவல் வெளியாகிவுள்ளது.
பிரபல பாடகரான ஹரிஹரன் இசை நிகழ்ச்சி இலங்கையில் 9ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் ஏற்பாடு செய்திருந்தார். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் ரம்பா,கலா மாஸ்டர், தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சிவா, கேபிஒய் பாலா, புகழ், சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகாலட்சுமி நடிகர் யோகி பாபு,ரெடிங்டன் கிங்ஸ்லி , டிடி எனப்படும் திவ்யதர்ஷினி, சுவேதா மோகன், ஸ்ரீநிஷா என ரசிகர்கள் பட்டாளமே பங்கேற்றனர், கலைஞர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில .திறந்த வெளி அரங்கில் நடந்த விழாவில், கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கியிருந்தவர்களுக்கு முன் பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இலவசமாக பார்க்கும் வகையில் பின் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக அங்கு கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள் நிகழ்ச்சியின் தடுப்பைத் தாண்டி கட்டணம் செலுத்தியவர்கள் பகுதிக்கு அத்துமீறி கூச்சலிட்டுக்கொண்டே நுழைய ஆரம்பித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பிரபலங்களும் எவ்வளவோ சொல்லியும் மேடை, ஒலி கருவிகள் வைத்திருந்த மேடை, மரங்கள் என அனைத்தின் மீதும் ஏறி ரசிகர்கள் அட்டகாசம் செய்தனர். இதனால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. போலிசார்கள் தடியடி நடத்தியப்பிறகே கூட்டம் கலைந்தது. பின் மீண்டும் நிகழ்ச்சியைத் தொடங்கி அவசர அவசரமாக முடித்ததாக தகவல் வெளியாகிவுள்ளன.
hariharan concert sri lanka
More Details CLICK HERE
Nothing should be given free. A musical show held in #Jaffna last night was an example. Free musical show participated by popular South Indian celebrities including singer #Hariharan was disrupted by the massive crowd.
— Zahran Careem (@zahranc) February 10, 2024
#Rambha Angry At #Hariharan Star Night Show At Srilanka pic.twitter.com/VQ2d5lwNNp
— chettyrajubhai (@chettyrajubhai) February 10, 2024
#WATCH | யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியை காண குவிந்த இளைஞர்கள்.
காவல் தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே சென்றதால் பதற்றம் ஏற்பட்டது!#SunNews | #Hariharan pic.twitter.com/8UY6BQky4I
— Sun News (@sunnewstamil) February 10, 2024