lion attacked man சிங்கத்தின் கூண்டுக்குள் குதித்து செல்ஃபி எடுத்த நபர் கடித்து குதறிய சிங்கம்
விபரீதத்தில் முடிந்த செல்ஃபி மோகம் முழு விவரம்
lion attacked man சிங்கத்தின் கூண்டுக்குள் குதித்து செல்ஃபி எடுத்த நபர் கடித்து குதறிய சிங்கம்
விபரீதத்தில் முடிந்த செல்ஃபி மோகம் முழு விவரம்
திருப்பதியில் வெங்கடேஷ்வரா விலங்குகள் பூங்காவில் மூன்று சிங்கங்கள் உள்ளன. இந்த விலங்குகள் பூங்காவிற்கு பார்க்க வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரஹ்லாத்(38) என்பவர், சிங்கங்கள் இருந்த பகுதிக்கு வந்துள்ளார். பிறகு அங்கு தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளர். உடனே அங்கு செல்ல வேண்டம் என்று சிங்கத்தை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டு இருந்த காவலாளி தெரிவித்துள்ளார். ஆனால் சிங்கத்துடன் செல்ஃபி எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பிரஹ்லாத் சிங்கத்தின் கூண்டுக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏற, அவரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சிங்கத்தின் காப்பாளர் உள்ளே குதிக்காதே என்று சத்தம் போட்டார். ஆனால் அவரது எச்சரிக்கையை மீறி சிங்கம் இருந்த கூண்டுக்குள் பிரஹ்லாத் குதித்துவிட்டார்.
உள்ளே குதித்த பிரஹ்லாத், சிங்கத்தை செல்ஃபி எடுக்க அதை கோபப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார். உடனே சிங்கம் அந்த நபரை தாக்க ஆரம்பித்தது. பிரஹ்லாத் அங்கு இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால் சிங்கம் அந்த நபரின் கழுத்தை கடித்து கூண்டின் ஒரு ஓரத்திற்கு இழுத்துச் சென்று கடித்து குதறியது.
இதை பார்த்து பதரிய சிங்கத்தின் காப்பாளரும் மற்றவர்களும் ஓடி வந்து சிங்கத்தை அங்கிருந்து விரட்டினார். பலத்த காயத்துடன் பிரஹ்லாத் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் அந்த நபர் இறந்துபோனார்.
பிரஹ்லாதை தாக்கிய சிங்கம் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. மூன்று சிங்கத்தில் ஒரு சிங்கம் மட்டும் மக்களின் பார்வைக்கு திறக்கப்படுவது வழக்கம். மற்ற இரண்டு சிங்கம் எப்போதும் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் என்று பூங்கா அதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்,