CINEMA

Cooku With Comali குக் வித் கோமாளியில் இருந்து விலகிய செப் தாமு , வெங்கடேஷ் பட் காரணம் என்ன அவரே வெளியிட்ட வீடியோ

Cooku With Comali  குக் வித் கோமாளியில் இருந்து விலகிய செப் தாமு , வெங்கடேஷ் பட் காரணம் என்ன அவரே வெளியிட்ட வீடியோ பிரபல தனியார் தொகைகாட்சி டிவியான விஜய் டீவியில் குக் வித் கோமாளி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது,

அதனை செப் தாமு , வெங்கடேஷ் பட் கலந்து கொண்டு திறம்பட 4 சீசன் நடத்தியுள்ளார்கள் குக் வித் கோமாளி 5வது சீசன் தொடங்க உள்ள நிலையில் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இன்னொரு நடுவரான தாமு அவர்களும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

Cooku With Comali
Cooku With Comali

செஃப் வெங்கடேஷ் பட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

குக் வித் கோமாளியின் புதிய சீசன் தொடங்குவது குறித்து கடந்த சில மாதங்களாக ஊகங்கள் நிலவி வருகின்றன. சீசன் 5-ல் நான் நடுவராக தொடர்வேன் என சமூக வலைதளங்களில் கணிப்புகள் வலம் வருகின்றன. புதிய சீசனில் நான் பங்கேற்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தும் வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்கிறேன்.என்னையும் சேர்த்து பல லட்சம் பேரை மகிழ்விக்கும் அந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து ப்ரேக் எடுத்துக்கொள்கிறேன்.

குக் வித் கோமாளி என்னுடைய ஜாலியான பக்கத்தைக் காட்டியது. மேலும் நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது. 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, மற்ற வாய்ப்புகளை நோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளேன். நிகழ்ச்சியின் இயக்குநர் உள்ளிட்டோருக்கு நன்றி.மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவர்களின் மன அழுத்ததை குறைக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. இந்த முடிவு ஒரு கடிமான முடிவாக இருந்தாலும், அதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அது குறித்து யூகித்துக்கொண்டிருங்கள். நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மேலும் தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் நான் நேற்று வெளியிட்ட பதிவுக்கு மக்கள் மத்தியில் அதிகமான கமெண்ட்களை பார்க்க முடிந்தது.ஆனாலும் நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன். நான்கு வருஷத்துக்கு அப்புறமா இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுகிறேன். இனி நான் எனக்கு பிடித்ததை செய்யப் போகிறேன் வெகு விரைவில் ஒரு பெரிய அனௌன்ஸ்மெண்ட் உங்களுக்கு காத்திருக்கிறது. அதில் நானும் செஃப் தாமுவும் சேர்ந்து தான் அந்த நிகழ்ச்சியில் இருக்கப் போகிறோம் என்று வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.

More Details

Cooku With Comali

Related Articles

Back to top button