Tamil Nadu State Film Award தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு! முழு பட்டியல் இதோ
Tamil Nadu State Film Award தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் -பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 6.3.2024 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குச் காசோலை. நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழாப் பேருரையாற்றுவார்கள்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள். திரைப்பட விருதுகள் வழங்கும் 2015-ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட விழாவில் பரிசு பெறும்
சிறந்த திரைப்படங்கள். நடிகர் நடிகையர்,தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:-
2015ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்ககள்
1 சிறந்த படம் முதல் பரிசு தனி ஒருவன் திரைப்படத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு பசங்க 2 திரைப்படத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு பிரபா திரைப்படத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு இறுதிச்சுற்று திரைப்படத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது
5 பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) 36 வயதினிலே திரைப்படத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது
சிறந்த வில்லன்
சிறந்த வில்லன் விருதை தனி ஒருவன் திரைப்படத்திற்க்காக நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்கப்பட்டுள்ளது
சிறந்த நடிகர்
ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)
சிறந்த நடிகை
ஜோதிகா (36)
சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு
கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)
சிறந்த நடிகை சிறப்புப் பரிசு
ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த வில்லன் நடிகர்
அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த நகைச்சுவை நடிகர்
சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
சிறந்த நகைச்சுவை நடிகை
தேவதர்ஷினி திருட்டுகல்யாணம்
சிறந்த குணச்சித்திர நடிகர்
தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
சிறந்த குணச்சித்திர நடிகை
கவுதமி (பாபநாசம்)
சிறந்த இயக்குநர்
சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
சிறந்த கதையாசிரியர்
மோகன் ராஜா (தனி ஒருவன்)
சிறந்த உரையாடலாசிரியர்
இரா.சரவணன் (கத்துக்குட்டி)
சிறந்த இசையமைப்பாளர்
ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)
சிறந்தப் பாடலாசிரியர்
விவேக்
சிறந்த பின்னணிப் பாடகர்
கானா பாலா (வை ராஜா வை)
சிறந்த பின்னணிப் பாடகி
கல்பனா ராகவேந்தர்
சிறந்த ஒளிப்பதிவாளர்
ராம்ஜி (தனி ஒருவன்)
சிறந்த ஒலிப்பதிவாளர்
ஏ.எல்.துக்காராம்
ஜெ.மஹேச்வரன் தாக்க) (தாக்க
சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்)
கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்)
பிரபாகரன் (घक्लक 2)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர்
ரமேஷ் (உத்தம வில்லன்)
சிறந்த நடன ஆசிரியர்
பிருந்தா (தனி ஒருவன்)
சிறந்த ஒப்பனைக் கலைஞர்
சபரி கிரீஷன் இறுதிச்சுற்று)
சிறந்த தையற் கலைஞர்
வாசுகி பாஸ்கர் (LDIILIT)
சிறந்த குழந்தை நட்சத்திரம்
1). மாஸ்டர் நிஷேஸ்
2). பேபி வைஷ்ணவி
சிறந்த பின்னணிக்குரல் (ஆண்)
கௌதம் குமார் (36 पक्रीनी)
சிறந்த பின்னணிக்குரல் (பெண்)
ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2014-2015
சிறந்த இயக்குநர் கே.மோகன் குமார் (40un)
சிறந்த ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே)
சிறந்த ஒலிப்பதிவாளர் வி.சதிஷ் (கண்ணா மூச்சாலே)
சிறந்த படத்தொகுப்பாளர் ஏ.முரளி (L)
சிறந்த படம் பதனிடுவர் வி.சந்தோஷ்குமார் (கிளிக்)
Tamil Nadu State Film Award
More Details:- Click Here
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.@mp_saminathan அவர்கள் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் – பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.#CMMKSTALIN | #TNDIPR |@mkstalin pic.twitter.com/AnGZGyuNGP
— TN DIPR (@TNDIPRNEWS) March 4, 2024