JOBIMPORTANT NEWS

bakery products making course நீங்களும் சொந்த தொழில் துவங்கலாம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

bakery products making course தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் “பேக்கரி பொருட்கள் தயாரித்தல்” பயிற்சி வரும் 13.03.2024 முதல் 15.03.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

bakery products making course
bakery products making course

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் “பேக்கரி பொருட்கள் தயாரித்தல்” பயிற்சி வரும் 13.03.2024 முதல் 15.03.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றின் கிடைக்கும் தன்மை, கருவிகள் மற்றும் உபகரணங்களின் உள்ளீடுகள், இயந்திரங்கள் முதலியன, ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்கவைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள் கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.

மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. தொலைபேசி / கைபேசி எண்கள்: 044-22252081, 22252082, 8668102600, 8668100181, 7010143022

bakery products making course

CLICK HERE

Related Articles

Back to top button