JOB

Maruthamalai Murugan Temple Recruitment 2024 மருதமலை முருகன் கோயில் வேலை வாய்ப்பு 8,10, ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Maruthamalai Murugan Temple Recruitment 2024 கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் மருதமலை முருகன் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில் உள்ள வெளித்துறை மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களில் கீழ்க்கண்ட விபரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடைய 18 வயது முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Maruthamalai Murugan Temple Recruitment 2024
Maruthamalai Murugan Temple Recruitment 2024

பணி:-

டிக்கெட் விற்பனை எழுத்தாளர்

அலுவலக உதவியாளர்

காவலர்

திருவலகு

விடுதி காப்பாளர்

பல வேலை

ஓட்டுநர்

பிளம்பர்

கம் பம்ப் ஆபரேட்டர்

மினி பஸ் கிளீனர்

கரிவதரதராஜ திருக்கோயில், வடவள்ளி கோயிலில் ஒரு காவலர் பணியிடம் மற்றும் ஒரு திருவலகு பணியிடம் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:-

டிக்கெட் விற்பனை எழுத்தாளர் பணிக்கு:-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level22- ரூ.18500-58600 வரை

அலுவலக உதவியாளர் பணிக்கு:-

எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level17- ரூ.15900-50400

காவலர் பணிக்கு:-

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: Pay Matrix-Level17- ரூ.15900-50400

திருவலகு பணிக்கு:-

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level17- ரூ.15900-50400

விடுதி காப்பாளர் பணிக்கு:-

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level17- ரூ.15900-50400

பலவேலை பணிக்கு:-

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level17- ரூ.15700-50000

டிரைவர் பணிக்கு:-

8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும் குறைந்தது ஓராண்டு ஓட்டுநர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level22- ரூ.18500-58600

பிளம்பர் கம் ஆபரேட்டர் பணிக்கு:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குழாய் தொழில்/ குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும்.

தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடைய பிரிவில் ஐந்து வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level19- ரூ.18000-56900

மின் உதவியாளர் பணிக்கு:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் பணியாளர் படிப்பில் தேர்ச்சி

தொழில் பயிற்சி நிறுவனர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து ‘H’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level18- ரூ.16600-52400

மினி பஸ் கிளீனர் பணியிடத்திற்கு:-

8- ஆம் வகுப்பு கல்வி தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி போதும்.

மோட்டார் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாத சம்பளம்: Pay Matrix-Level17- ரூ.15900-50400

மருதமலை முருகன் கோயில் வேலை வாய்ப்பு
மருதமலை முருகன் கோயில் வேலை வாய்ப்பு

வயது வரம்பு:-

வயது வரம்பை பொறுத்தவரை 18- வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தபால் முகவரி:-

துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம்-641046

Maruthamalai Murugan Temple Recruitment 2024

விண்னப்பிக்க கடைசி நாள் :-

05.04.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் CLICK HERE

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

மேலும் விவரங்களுக்கு CLICK HERE

பணி தொடர்பான நிபந்தனைகள்:-

1. விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும்

2. இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

4. இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

5. விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள்மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only] பெற்று அனுப்பப்பட வேண்டும்.

6. விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும்.

7. விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், கேட்சுப்பட்டுள்ள சான்று நகல்கள் இணைக்கப்படாமலும், வரப்பெறும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

8. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் நிர்வாக நலன் கருதி இத்திருக்கோயிலின் உபகோயிலுக்கோ அல்லது பிற முதுநிலை திருக்கோயிலுக்கு பணிமாற்றம் செய்யப்படுவர்.

9. பணிக்கு தேர்வாரும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் அரசு உதவி மருத்துவரிடமிருந்து (Assistant Civil Surgeon) பெறப்பட்ட உடல் தகுதி சான்றிகழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

10.விண்ணப்பங்களை அனுப்பும்போது மேல் உறையின் மீது கண்டிப்பாக விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

11.நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது.

12.விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின்போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும்.

13.விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்தும், சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவர்.

14.நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோயிலிலிருந்து எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாது.

15.விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் உண்மைத் தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

16.திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள், அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள். இதா திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

17.உபகோயில் பதவிக்கான விண்ணப்பத்தில் உபகோயில் காவலர் மற்றும் உபகோயில் திருவலகு என குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

18.பணி நியமனம் அரசாணை (நிலை) எண் 114 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதி 4-2) நாள் 03.09.2020 விதிகளுக்கும் மற்றும் அரசாணை எண் 219 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதி 4.2) நாள் 02.09.2022 விதிகளுக்குட்பட்டது.

19 அரசாணை (திலை] எண் 114 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அறி 4-2 நாள் 03.09.2020 விதி எண் 9ன்படி முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரியும் தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

20.நியமன முறையானது அடிப்படை கல்வித்தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள், கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

21.விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணைய தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

22.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிட வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் 641046 என்ற முசுவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஓட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும்இணைத்து அனுப்ப வேண்டும்.

23.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.04.2024 பிற்பகல் 5.45 மணிக்குள்

 

Related Articles

Back to top button