TamilNadu News

How To Join TVK Party 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராவது எப்படி

How To Join TVK Party விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

How To Join TVK Party
How To Join TVK Party

கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார் நடிகர் விஜய். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

How To Join TVK Party
How To Join TVK Party

உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்படுகின்றனர் என அறிவித்த விஜய் முதல் உறுப்பினராக கட்சியில் சேர்ந்தார்.இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்தார்.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 8-ம் தேதி சிறப்பு செயலி மூலம் தொடங்கியது. தொடங்கிய 3 நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளன

How To Join TVK Party

CLICK HERE

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துள்ளார். அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், முதல் முறையாக வீடியோ மூலம், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த வீடியோவில், நான் முதல் ஆளாக இணைந்து விட்டேன், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வருகின்ற சட்டமன்ற தேர்தலை நோக்கி என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, கட்சியின் உறுதி மொழியை படிங்க.. உங்களுக்கு பிடிச்சிருந்தா சேருங்க என்று பேசியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுதி மொழி

நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய:

1) WhatsApp users – https://bit.ly/tvkhq

2) TelegramApp users – https://t.me/tvkvijaybot

3) WebApp users – https://bit.ly/tvkfamily

4) Send WhatsApp message as ‘TVK’ to 09444-00-5555

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

Related Articles

Back to top button