sports News

ROYAL CHALLENGERS BENGALURU ஆர்சிபி அணியின் பெயர் திருத்தம் செய்யப்பட்டு புதிய பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ROYAL CHALLENGERS BENGALURU

ROYAL CHALLENGERS BENGALURU ஆர்சிபி அணியின் பெயர் திருத்தம் செய்யப்பட்டு புதிய பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக மாறி இருக்கிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் டி20 கிரிக்கெட் லீக்கில் பெண்கள் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. அந்த அணியின் 17 வருட டி20 கிரிக்கெட் லீக் வரலாற்றில் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

ROYAL CHALLENGERS BENGALURU
ROYAL CHALLENGERS BENGALURU

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பெயரில் ஒரு மாற்றத்தை அந்த அணி நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது. அதாவது பெயரில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பெயரில் உள்ள எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை செய்திருக்கிறது.

இதற்கு முன்பு Royal challengers Bangalore என்று இருந்தது, தற்பொழுது Royal challengers Bengaluru என்று மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது முன்பு பங்களூர் என்று இருந்தது தற்போது பெங்களூரு என்று மாற்றப்பட்டு இருக்கிறது. 

ROYAL CHALLENGERS BENGALURU

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க

Related Articles

Back to top button