INTERNATIONAL NEWSIMPORTANT NEWS

save abdul rahim 2 நாளில் 34 கோடி,நன்கொடை அளித்து மரண தண்டனைக் கைதியை  காப்பற்றிய கேரள மக்கள் முழு விவரம்

save abdul rahim 2 நாளில் 34 கோடி,நன்கொடை அளித்து மரண தண்டனைக் கைதியை  காப்பற்றிய கேரள மக்கள் முழு விவரம்

கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம், கடந்த 2006 ஆம் ஆண்டு அங்குள்ள ஒரு அரபு குடும்பத்தில் வீட்டு வேலையுடன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

save abdul rahim
save abdul rahim

அந்த குடும்பத்தின் மாற்று திறனாளியான மாணவரை பராமரிக்கும் பணியும் அப்துல் ரஹீம் செய்து வந்தார். ஒருநாள் அந்த மாணவரை காரில் வெளியே அழைத்து சென்ற போது அந்த மாணவர் கழுத்தில் பொருத்தியிருந்த செயற்கை உணவு குழாய் அடைப்பு ஏற்பட்டு மாணவர் மரணமடைந்தார்.

மாணவரின் பெற்றோர் அப்துல் ரஹீம் தங்கள் மகனை கொலை செய்ததாக புகாரளிக்க கைது செய்யப்பட்டார்.

அப்துல் ரஹீம் கொலை குற்றவாளி ஆனார், 18 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..சிறை தண்டனை முடியும் தருணம், மீண்டும் இறந்த சிறுவனின் குடும்பம் கோர்ட்டில் முறையீடு செய்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2018 இல் மரண தண்டனை விதித்தது, அதன்பின்பு அப்துல் ரஹீம் மேல்முறையீடு செய்தார் இந்த முடிவை பின்னர் நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இனி அப்துல் ரஹீம் இந்த உலகில் உயிர் வாழ வேண்டுமானால் ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது.அது இறந்த சிறுவனின் தந்தையோ, தாயாரோ மன்னிப்பு தந்தால் மட்டுமே ரஹீம் உயிர் வாழ முடியும்.

பெற்றோரிடம் பொது மன்னிப்பு வாங்க முயன்ற போது,மன்னிப்புக்கு ஈடாக இரத்த பணமாக 15 மில்லியன் சவுதி ரியால் – இந்திய ரூபாயில் சுமார் 34 கோடி ரூபாய்.18 ஏப்ரல் 2024 க்கு முன் இரத்தப் பணமாக செலுத்த வேண்டும்.இல்லையெனில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

34கோடி ரூபாய் எனும் பெருந்தொகை வழங்கி அப்துல் ரஹீம் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் கேரளாவை சேர்ந்தவர்கள் ஈடுபட துவங்கினர்.

பணம் வசூல் செய்ய Save Abdul Rahim என்கிற பிரத்யேக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.

கேரளாவின் பிரபல நகைக்கடையான செம்மனூர் ஜுவல்லரி நிறுவன அதிபர் போபி செம்மனூர் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்ததுடன் திருவனந்தபுரத்தில் இருந்து அப்துல் ரஹீம் உயிர் காக்க கேரள மக்களிடம் கையேந்துவதாக கூறி “யாசக யாத்திரை” மேற்கொண்டு வருகிறார்.. அவரோடு உண்டியல் ஏந்தி நூற்றுக்கணக்கானவர்கள் நிதி சேகரித்து வருகின்றனர்.மேலும் பல அமைப்புக்களும் , நடிகர்கள் தனார்வலர்கள், அரசியல் பிரமுகரகள் என பலரும் நிதி திரட்டி வருகின்றனர்.

எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு தினங்களில் 34 கோடி ரூபாய் வசூல் ஆகியது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது

இதற்கிடையில் அப்துல் ரஹீம் தாயார் பாத்தும்மா இந்திய பிரதமர் அலுவலகம் வழி மரண தண்டனையை தள்ளி வைக்க கோரிக்கை மனு அளித்துள்ளார் வருகிற 16ம் தேதிக்கு முன் 34கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கி அப்துல் ரஹீம் தாயகம் திரும்பி தாயுடன் இணைய நடைபெறும் முயற்சிகளை வல்ல இறைவன் எளிதாக்குவானாக.

save abdul rahim

ஆப் டவுன் லோடு செய்ய

Related Articles

Back to top button